இன்று முதல் தங்கப் பத்திர விற்பனை தொடக்கம்... அதிகாலையில் அஞ்சலகத்தில் குவிந்த முதலீட்டாளர்கள்!

 
இ சவரன் கோல்ட் பாண்ட்

இந்தியாவின் தங்க நகை முதலீட்டு மோகம் மற்ற நாடுகளை அதிகம். மக்களின் ஆசைகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் மத்திய அரசு மாதம் தோறும் இசவரன் பாண்ட்களை விற்பனை செய்து வருகிறது. தங்க நகை முதலீடுகளை முறைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. இன்று முதல் பிப்ரவரி 16ம் தேதி வரை இந்தியா முழுவதும் சவரன் கோல்ட் பாண்ட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை அருகில் உள்ள தபால் நிலையங்கள் வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் திருச்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி தலைமை தபால் நிலையம், லால்குடி தபால் நிலையம் மற்றும் 99 துணை தபால் நிலையங்களில் தங்கப்பத்திரம் விற்பனை இன்று (12ம் தேதி) முதல் தொடங்குகி றது. இத்திட்டத்தின் மூலம் ஒருவர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்க பத்திரத்தை வாங்கலாம்.
இ சவரன் கோல்ட் பாண்ட்
முதலீட்டு காலம் 8 ஆண்டுகளாக இருக்கும் 8வது ஆண்டின் முடிவில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்கப்பத்திரம் பணமாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இடையில் தேவைப்பட்டால் 5 ஆண்டு முடிந்த பிறகு தங்கப்பத்திரத்தை முன் முதிர்வு செய்து கொள்ளலாம்.இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீடுகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி மூலம் 2.5 சதவீத வட்டி கணக்கீடு செய்யப்பட்டு ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒருமுறை முதலீட்டாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இ சவரன் கோல்ட் பாண்ட்
இத்திட்டம் இன்று(12ம் தேதி ) முதல் 16ம் தேதி வரை அமலில் இருக்கும். ஒரு கிராம் விலை ரூபாய் 6 ஆயிரத்து 263என்று ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ளது.திருச்சி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் முதலீடு செய்யலாம். முதலீடு செய்யலாம், அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம் அல்லது வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் முதல் பக்கம் நகல் ஆகிய ஆவணங்கள் தேவையாக இருக்கும், தங்கத்தை பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் தங்க மதிப்பிற்கு சேமிக்கலாம்.

மேலும் திருட்டு போகும் என்ற கவலையில்லை மண்ணிலும் பொன்னிலும் செய்யப்படும் முதலீடு என்று மோசம் போகாது என நம் முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள் அப்புறம் என்ன வங்கிக்கோ தபால் நிலையத்திற்கு கிளம்புங்க !.

From around the web