ஆவணங்கள் இல்லை... ₹14 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் - கருவூலத்தில் ஒப்படைப்பு!

 
விருதுநகர் நகைகள் சோதனை தேர்தல் பறக்கும்படை விருதுநகர் நகைகள் சோதனை தேர்தல் பறக்கும்படை

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் கணக்கில் வராத சுமார் ₹14 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் வாகனங்களைச் சோதனையிட்டனர். அப்போது ஒரு தனியார் வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதில் சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

விருதுநகரில்

வாகனத்தில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான முறையான தேர்தல் ஆணைய அனுமதி அல்லது தகுந்த ரசீதுகள் அவர்களிடம் இல்லை என்பது தெரிய வந்தது. ஆவணங்கள் இல்லாததால், அந்த நகைகள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவை உடனடியாக மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் அளவு மிக அதிகமாக இருப்பதால், இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த நகைகளின் பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோதனை தேர்தல் நடத்தை விதிமுறைகள் விதிகள்

தேர்தல் நேரத்தில் ₹50,000-க்கு மேல் ரொக்கப் பணம் அல்லது விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். மதுரையில் 77 சவரன் நகை சிக்கிய நிலையில், விருதுநகரில் ₹14 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கியிருப்பது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.