தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைவு!

 
அதிரடியாக உயர்ந்த தங்கம்!! சவரனுக்கு ரூ240 அதிகரிப்பு!!
இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப் படுவதும் நம்மவர்களின் இயல்பாக உள்ளது. இந்த நிலையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து, ரூ.6,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, ரூ.51,440-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,288-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 21 ரூபாய் குறைந்து, ரூ.5,267-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 81,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ரூ.82,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.82.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web