நகைக்கடன் வாங்கியவர்களுக்கு வங்கிகள் அனுப்பும் அதிர்ச்சி நோட்டீஸ்... ஏலம் போகும் அபாயம்!

 
தங்கம்

 

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், விலை உச்சத்திலிருந்தபோது அதிகபட்ச தொகைக்கு நகைக்கடன் பெற்றவர்கள் தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். தங்கத்தின் சந்தை மதிப்பு குறைந்துள்ளதால், கடன் மற்றும் மதிப்பு விகிதம் (LTV) நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகரித்துள்ளது.

நகைக் கடன் பெறுவோருக்கு நற்செய்தி: நகை மதிப்பில் 80% வரை கடன் வழங்க RBI அனுமதி!" 📌 உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ள நமது பக்கத்தைப் ...

இதன் காரணமாக, கடனைச் சமநிலைப்படுத்தக் கூடுதல் நகைகளை அடமானமாக வைக்க வேண்டும் அல்லது கடன் தொகையில் ஒரு பகுதியை உடனடியாகத் திரும்பச் செலுத்த வேண்டும் என வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகின்றன.

தங்கத்தின் விலை தொடர் சரிவில் இருப்பதால், கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கான தங்கத்தின் உச்ச மதிப்பை அரசு குறைத்துள்ளது ...

வங்கிகள் விதித்துள்ள காலக்கெடுவுக்குள் கூடுதல் நகைகளையோ அல்லது பணத்தையோ செலுத்தத் தவறினால், அடமானம் வைக்கப்பட்ட நகைகள் ஏலத்திற்குச் செல்லும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் நகைக்கடன் பெற்ற பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.