ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.3,440 குறைந்த தங்கம் விலை... மேலும் குறையுமா?

 
தங்கம் தங்கத்தின் தங்கம் தங்கத்தின்

கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,440 குறைந்துள்ள நிலையில் வார இறுதி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் தங்கம் விலையில் மாற்றமின்றி, நேற்று சனிக்கிழமை நிலவிய அதே விலையிலேயே நீடிக்கிறது.

தங்கம்

1 கிராம் தங்கம் (22 கேரட்): ரூ. 14,200 1 சவரன் தங்கம் (22 கேரட்): ரூ. 1,13,600. கடந்த மே 31ம் தேதி நிலவரப்படி 1 சவரன் தங்கம் ரூ.1,17,040 என்ற மிக உயர்வான விலையில் விற்பனையானது. தற்போது படிப்படியாகக் குறைந்து ரூ. 1,13,600 ஆக வந்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 3,440 வரை விலை குறைந்துள்ளது.

தங்கம்

அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள் எதிர்பார்த்ததை விட வலுவாக வந்ததால், அந்நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு உயர்ந்து, தங்கத்தின் மீதான முதலீடுகள் சற்று குறைந்ததே இந்த திடீர் விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு நகை எடுக்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்த வாரச் சரிவு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.