தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு: புதிய விலை விவரம்!

 
தங்கம் தங்கத்தின்

தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்த்தப்பட்டுள்ளது.

தங்கம்

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,240-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.14,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் ரூ.1,13,920-க்கு விற்றது, இன்று ரூ.960 உயர்ந்து ரூ.1,14,880-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

தங்கத்தின் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.