இன்று மாலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்வு... போர் பதற்றத்தால் தொடர்ந்து ஏறுமுகம்!

 
தங்கம் தங்கம்

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

இன்று காலை சவரனுக்கு ரூ. 480 குறைந்திருந்த நிலையில், தற்போது ஒரே அடியாக ரூ. 1,360 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 1,10,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 170 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 13,770-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று ஏறுமுகமாகவே உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 5 உயர்ந்து ரூ. 255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,55,000 என்ற புதிய இலக்கை எட்டியுள்ளது.

வெள்ளி விலை தங்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப்பதற்றம் (ஈரான் - இஸ்ரேல் மோதல்) காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். உலகளாவிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு, தங்கத்தின் தேவையைக் கணிசமாக உயர்த்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை உள்நாட்டில் அதிகரிக்கிறது.