தங்கம் விலை மீண்டும் உயர்வு... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம்

 

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.30) மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,09,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்

நேற்று ஒரு சவரன் ரூ.1,09,120-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.560 உயர்ந்துள்ளது. இதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.70 அதிகரித்துள்ளது.நேற்று ஒரு கிராம் ரூ.13,640-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.13,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் தங்கத்தின்

இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் இன்றைய விலை உயர்வு கவனத்தை பெற்றுள்ளது.தங்கத்தின் விலை தினசரி சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில், அடுத்தடுத்த நாட்களில் தங்கத்தின் விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்படுமா என்பது சந்தை நிலவரத்தை பொறுத்தே அமையும்.