தங்கம் விலை கிடுகிடு உயர்வு! சவரனுக்கு ரூ.760 அதிகரிப்பு

 
தங்கம்

 

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக உள்நாட்டு சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.13,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.760 அதிகரித்து ரூ.1,10,200-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 உயர்ந்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், பார் வெள்ளியின் விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் தங்கத்தின்

சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் தினசரி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்றைய விலை உயர்வு நகை வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.