தொடர் சரிவில் தங்கம்... நகைப் பிரியர்கள் உற்சாகம்!

 
தங்கம்

 

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,680 அளவுக்கு விலை சரிந்த நிலையில், இன்று சவரனுக்கு மேலும் ரூ.200 குறைந்துள்ளது.

தங்கம்

அதன்படி, செப்டம்பர் 29-ம் தேதி நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,09,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.13,640-க்கு விற்பனையாகிறது.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

தங்கம் தங்கத்தின்

இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,40,000 ஆக உள்ளது.தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து மாறுபட்டு வருவதால், நகை வாங்க திட்டமிடுபவர்கள் அன்றைய விலை நிலவரத்தை தெரிந்துகொண்டு வாங்குவது முக்கியம்.