தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 சரிவு.. ஒரு சவரன் ரூ.1,05,880-க்கு விற்பனை!

 
தங்கம் தங்கத்தின்

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாகச் சவரனுக்கு ரூ.1,240 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் நாட்களில் இன்னும் தங்கம் விலை குறையவே வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தங்கம்

ஆபரணத் தங்கம் நேற்று ஒரு சவரன் ரூ.1,07,120-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,240 குறைந்து ரூ.1,05,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.155 குறைந்து ரூ.13,235-க்கு விற்கப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.2,680 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம்

தங்கத்தின் பாதையிலேயே வெள்ளியின் விலையும் இன்று சரிவைக் கண்டுள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்து ரூ.225-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,25,000-க்கும் விற்பனையாகிறது.