தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு - மேலும் குறைய வாய்ப்பு!

 
தங்கம் தங்கத்தின்

தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று சரிவைக் கண்டுள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை தொடர்கிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் வழக்கம் போல் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தங்கத்தின் விலை  மேலும் குறையலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.