தங்கம் விலை தொடர் சரிவு... ஒரே மாதத்தில் சவரனுக்கு ரூ.8,160 வரை குறைவு!

 
தங்கம் தங்கத்தின்

கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் 24-ஆம் தேதி நிலவரப்படி, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு விலையானது படிப்படியாகக் குறைந்து, தற்போது சவரனுக்கு ரூ.8,160 சரிவடைந்து ரூ.1,12,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்

சர்வதேச சந்தையில் நிலவிவரும் மந்தநிலை மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாகத் தங்கத்தின் விலையில் இந்த இறங்குமுகம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் வர்த்தகச் சூழலைக் கருத்தில் கொண்டு, வரும் நாட்களிலும் தங்கம் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாகச் சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.