சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரும் சரிவு... சவரனுக்கு ரூ.2,500 மேல் குறைவு!

 
தங்கம் தங்கம்

சர்வதேச சந்தையில் நிலவி வரும் மாற்றங்களால் இந்தியாவிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,06,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலகளாவிய பொருளாதாரக் காரணிகளால் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. 1 அவுன்ஸ் தங்கம் சுமார் $165 குறைந்து, தற்போது $4,388-க்கு வர்த்தகமாகிறது. வெள்ளியின் விலையும் அவுன்ஸிற்கு $4 குறைந்து, $68-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

நேற்று காலையில் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், மாலை நேரத்தில் அதிரடியாகச் சரிந்தது. இன்றும் அந்தச் சரிவு நீடிக்கிறது: 1 கிராம்: ரூ.13,350 1 சவரன் (8 கிராம்): ரூ.1,06,800 நேற்றுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு சுமார் ரூ.2,560 வரை குறைந்துள்ளது.

தங்கத்தைப் பின்பற்றி வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்

விலை குறைவிற்கான காரணங்கள்:

சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதால், மற்ற நாட்டு கரன்சிகளுக்குத் தங்கத்தின் மீதான முதலீடு குறையத் தொடங்கியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றங்கள் ஓரளவுக்குத் தணிந்து, பேச்சுவார்த்தைக்கான அறிகுறிகள் தெரிவதால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்திலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை உச்சத்தில் இருந்ததால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெற்று லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளனர்.