சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் வீழ்ச்சி; உலகளாவிய பொருளாதார மாற்றங்களால் எதிரொலி!
சர்வதேச தங்கம்: 1 அவுன்ஸ் தங்கம் 148 டாலர் சரிந்து, 4,328 டாலராக விற்பனையாகிறது. சர்வதேச வெள்ளி: 1 அவுன்ஸ் வெள்ளி 6 டாலர் குறைந்து, 67 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்திருந்த நிலையில், தற்போது ஒரு சவரன் தங்கம் 1,15,440 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய வீழ்ச்சியின் (148 டாலர் சரிவு) முழுமையான தாக்கம், இன்று காலை இந்திய கமாடிட்டி சந்தை மற்றும் உள்ளூர் ஆபரண தங்க வர்த்தகம் முழுமையாகத் துவங்கிய பின் இன்னும் கூடுதலாக எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், சர்வதேச சந்தையின் இந்த அதிரடி மாற்றம் நகை வாங்குவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம்.
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் வீழ்ச்சி, உலகளாவிய பொருளாதார மாற்றங்களின் எதிரொலியாகவே பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், சர்வதேச சந்தையின் இந்த அதிரடி மாற்றம் நகை வாங்குவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம்.