தங்கம் விலை தொடர் சரிவு... நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

 
தங்கம் தங்கத்தின்

சர்வதேச நிலவரங்கள் மற்றும் மேற்காசியப் போர் பதற்றங்களுக்கு மத்தியில் தங்கம் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் (கிராம்) ரூ.100 குறைந்து, ரூ.13,390-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.800 குறைந்து, ரூ.1,07,120-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

ஒரு கிராம் வெள்ளி: ரூ.10 குறைந்து, ரூ.230-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி: ரூ.10,000 சரிந்து, ரூ.2,30,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று விஜயதசமித் திருநாளில் தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்த நிலையில், இன்றைய நாளிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரசரவெனக் குறைந்துள்ளது இல்லத்தரசிகளுக்கும் நகைப்பிரியர்களுக்கும் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது.