சவரன் ரூ.1.20 லட்சத்தை நெருங்கிய நிலையில் தங்கம் விலை சரிவு!
கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.2,000 வரை உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அதிரடி உயர்வுக்குப் பிறகு, இன்று தங்கம் விலை சற்று இறங்குமுகமாக உள்ளது.
ஆபரணத் தங்கம் (22 கேரட்) சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.14,900-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக பிப்.24: பவுன் ரூ.1,19,120, பிப்.25: பவுன் ரூ.1,19,440, பிப்.26: பவுன் ரூ.1,19,360 (நேற்று ரூ.80 குறைந்தது)
தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வரும் நாட்களில் திருமண சீசன் தொடங்கவுள்ள நிலையில், இந்தச் சிறிய விலை குறைப்பு வாடிக்கையாளர்களுக்குச் சற்று நிம்மதியைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
