தங்கம் விலை சர்வதேச சந்தையில் மளமளவெனச் சரிந்தது.. 1 அவுன்ஸ் $32 வரை குறைந்து வர்த்தகம்!
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டுச் சந்தையிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $32.23 (இந்திய மதிப்பில் சுமார் ₹3,084.62) குறைந்து $4,162.56 ஆக விற்பனையாகிறது.

தங்கம் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் சரிவைக் சந்தித்துள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை $0.90 குறைந்து $60.06-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,720-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,760-க்கும் விற்கப்பட்டது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக, இன்றைய நாளின் வர்த்தகத்தின் போது தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
