மீண்டும் உயரத் தொடங்கியது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.960 உயர்வு: ரூ.92,320-க்கு விற்பனை!

 
தங்கம்

கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,320-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.120 அதிகரித்து, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,540-க்கு வர்த்தகமாகிறது. கடந்த இரண்டு வாரங்களில் சவரனுக்கு ரூ.15,000-க்கும் மேல் விலை குறைந்திருந்ததால் உற்சாகத்தில் இருந்த நகைப் பிரியர்கள், இன்றைய திடீர் உயர்வால் கலக்கமடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.295 குறைந்து ரூ.11,420-க்கும், ஒரு சவரன் ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.165-க்கு வர்த்தகமானது.

தங்கம்

கடந்த மாதம் வரை சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த தங்கம், கடந்த இரண்டு வாரங்களில் சவரனுக்கு ரூ.15,000-க்கும் அதிகமாகக் குறைந்திருந்தது. இருப்பினும், சர்வதேசச் சந்தை மாற்றங்கள் மற்றும் முதலீட்டு நகர்வுகளால் இன்று மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது.

தங்கத்தின் சமீபத்திய விலை வீழ்ச்சிக்கு அமெரிக்க வட்டி விகிதக் கொள்கைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெறுதல் மற்றும் சர்வதேசப் பொருளாதார மந்த நிலை ஆகியவை முக்கியக் காரணங்களாக நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.

தங்கம் தங்கத்தின்

இந்த விலைச் சரிவு தொடருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை மாற்றியமைப்பதைப் பொறுத்தே சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை கூடவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கம், தற்போது தற்காலிக வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதனால், அடுத்த கட்டத்தில் இதே அளவிற்கோ அல்லது இதைவிட அதிகமாகவோ விலை உயர்வு ஏற்படக்கூடும் எனச் சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.