தங்கம் விலை குறையத் தொடங்கியது... சவரனுக்கு ரூ.400 குறைவு... ஒரு சவரன் ரூ.93,760-க்கு விற்பனை!

 
தங்கம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 28) சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.93,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து ரூ.11,720-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தங்கம்

நேற்று நவம்பர் 27ம் தேதி ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.94,160-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.93,760-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.11,770-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்

கடந்த சில நாட்களாகத் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நீடித்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்திருப்பது நகை வாங்கக் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் நகைப் பிரியர்களிடையே சற்று நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.