மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம்... வாரத்தின் முதல் நாளில் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
Oct 26, 2026, 09:59 IST
தமிழகத்தில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.120 அதிகரித்து ரூ.1,04,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,04,560-க்கு விற்பனையான நிலையில், இன்று அதன் விலை உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.15 அதிகரித்து ரூ.13,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே, வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.220-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை நிலையாக உள்ளது.
