தங்கம் விலை புதிய உச்சம்.. ஃபெடரல் வங்கி வட்டி உயர்விலும் திடீர் உயர்வு!

 
தங்கம் தங்கத்தின்

சர்வதேச பொருளாதார நிலவரங்களால் கடந்த சில மாதங்களாகத் தங்கம் விலையில் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்புக்குப் பிறகும் தங்கம் விலை சரிவடையாமல் மேலும் அதிகரித்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் - அமெரிக்க போர் சூழல் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம், அமெரிக்க டாலர் வலுவிழப்பு, வேலையின்மை மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் தங்கம் விலை தினந்தோறும் மாறுதலுக்கு உள்ளாகி வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கம்

இந்த நிலை மாற வேண்டுமானால் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்றும், அவ்வாறு உயர்த்தப்பட்டால் உலகளவில் தங்கம் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி, வட்டி விகிதத்தை 3.75 சதவீதம் முதல் 4 சதவீதமாக அதிகாரப்பூர்வமாக நிர்ணயித்துள்ளது.

தங்கம்

வட்டி உயர்வால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,240-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.130 அதிகரித்து ரூ.14,285-க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.