தங்கம் விலை மீண்டும் உயர்வு... சவரன் ரூ.1.13 லட்சத்தைத் தாண்டியது - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் உள்நாட்டில் நிலவும் அரசியல் சூழலுக்கு மத்தியில், தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (மே 7) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.400 உயர்ந்து ரூ.1,13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,100-க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,150-க்கு விற்பனை ஆகிறது. தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகத்தில் இருப்பது, திருமண விசேஷங்களுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது.

தங்கம் விலை உயர்ந்த போதிலும், வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி: ரூ.270. ஒரு கிலோ வெள்ளி: ரூ.2,70,000
