தங்கம் விலை மீண்டும் உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
தங்கம்

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித மாற்றங்களால் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

22 கேரட் தங்கம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 13,710-க்கும், சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,09,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,45,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.