மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... சவரன் ₹1,11,200-யைத் தொட்டது!
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.5,600 வரை உயர்ந்துள்ளது.

பாரம்பரியம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு மட்டுமின்றி, பாதுகாப்பான சேமிப்பாகவும் பார்க்கப்படுவதால் இந்திய மக்களிடையே தங்கத்தின் தேவை எப்போதும் அதிகமாகவே உள்ளது. சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதாரச் சூழல் மற்றும் அமெரிக்கா - ஈரான் போர் போன்ற அரசியல் பதற்றங்கள் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தொடர்ச்சியான இந்த அதிரடி விலை உயர்வு, சுபநிகழ்ச்சிகளுக்காகத் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
