தங்கம் விலை அதிரடி உயர்வு.. சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,520-க்கு விற்பனை!
Oct 9, 2026, 10:47 IST
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை திடீரென உயர்ந்துள்ளது.
22 காரட் தங்கம் (ஆபரணத் தங்கம்) கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ரூ.13,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ரூ.1,10,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, கடந்த 8 நாட்களாக நீடிக்கும் அதே விலையில் தொடர்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
