தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது.. வெள்ளி விலையும் கிடுகிடு உயர்வு!

 
தங்கம் திருமணம் கல்யாணம் இளம்பெண் தங்கம் திருமணம் கல்யாணம் இளம்பெண்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, மீண்டும் புதிய உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ.1,18,000-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,18,480 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,750-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.14,810 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று இருந்த விலையை விட ரூ.5 உயர்ந்து, இன்று ரூ.290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி நேற்று இருந்த விலையை விட ரூ.5,000 கிடுகிடுவென உயர்ந்து, இன்று ரூ.2,90,000 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை தங்கம்

சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.