மீண்டும் உயரத் தொடங்கியது தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.1,08,280-க்கும் விற்பனை!
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மற்றும் நுகர்வோரிடையே கவனம் பெற்றுள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கம் கடந்த அக்டோபர் 15-ம் தேதியன்று ஒரு கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.13,515-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,08,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று மாற்றமின்றி அதே விலையிலேயே நீடித்தது.

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.13,535-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,08,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையைப் பொறுத்தவரை இன்று எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நிலைபெற்றுள்ளது. அதன்படி, வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் (ரூ.2 லட்சத்து 40 ஆயிரம்) விற்பனையாகி வருகிறது.
