நகைப் பிரியர்கள் இன்ப அதிர்ச்சி... 3 நாட்களுக்கு பிறகு தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி விலை குறைப்பு!

 
தங்கம்

 

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிராம் தங்கம் ரூ.15,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலையும் ரூ.160 குறைந்து விற்பனை நடந்து வருகிறது.

தங்கம்

தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,20,080-ஆகக் குறைந்துள்ளது. தங்கம் போலவே வெள்ளி விலையும் சந்தையில் கணிசமாக வீழ்ச்சியைக் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 வரை குறைந்து ஒரு கிராம் ரூ.265-க்கு விற்கப்படுகிறது.

தங்கம் தங்கத்தின்

இதன் தொடர்ச்சியாக மொத்த விற்பனையில் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைவு பொதுமக்கள் மற்றும் நகை வாங்குவோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.