வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை அதிரடி சரிவு... சவரனுக்கு ரூ.1,080 குறைந்து விற்பனை!

 
தங்கம்

 

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக., 31) சவரனுக்கு ரூ.1,080 சரிந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.116,040-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,080 குறைந்து, ரூ.114,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.135 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,370-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை திடீரெனக் குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.