தொடர்ந்து 4-வது நாளாக குறைந்த தங்கம் விலை!

 
தங்கம்

 

தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் (அக்டோபர் 15) குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.13,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.600 குறைந்து ரூ.1,08,120 ஆக உள்ளது.

தங்கம்

24 கேரட் தங்கம், வெள்ளி விலை நிலவரம்

24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.82 குறைந்து ரூ.14,744 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.656 குறைந்து ரூ.1,17,952 ஆகவும் உள்ளது. அதேபோல், 18 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,115 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.88,920 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் தங்கத்தின்

வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,40,000 ஆக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மாற்றம் நகை வாங்கத் திட்டமிடுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.