தாறுமாறாக எகிறிய தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
Updated: Oct 27, 2026, 09:57 IST
தமிழகத்தில் தங்கம் விலை இன்று (அக். 27) மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் கூடுதல் செலவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சவரனுக்கு ரூ.400 உயர்வு
நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,04,680-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.50 அதிகரித்து ரூ.13,135 ஆக உள்ளது.

மாற்றமில்லாத வெள்ளி விலை
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.220-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மாறக்கூடும் என்பதால், நகை வாங்குவதற்கு முன்பு அன்றைய விலையைச் சரிபார்ப்பது அவசியம்.
