சற்றே குறைந்த தங்கம் ... நகைப் பிரியர்கள் ஆறுதல்!

 
தங்கம் வெள்ளி தங்கம் வெள்ளி

 

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த நிலையில், இன்று (17.04.2026) விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து, ரூ.14,210-க்கு விற்பனை ஆவது நகைப்பிரியர்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.

தங்கம்

நேற்றைய நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 13-ம் தேதி ஒரு சவரன் ரூ.1,12,480-க்கு விற்ற தங்கம், அடுத்தடுத்த நாட்களில் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இன்று ஏற்பட்டுள்ள இந்த விலை சரிவு, இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தங்கம்

வெள்ளி விலையைப் பொறுத்தமட்டில் இன்றைய தினம் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்களே இந்த விலை ஏற்ற இறக்கங்களுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது