மீண்டும் உயர்ந்த தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
கடந்த சில நாட்களாகப் படிப்படியாகக் குறைந்து வந்த தங்கம் விலை, இன்று திடீரென ராக்கெட் வேகத்தில் உயர்ந்து முதலீட்டாளர்களையும், நகைப்பிரியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 20-ந்தேதிக்குப் பிறகு தங்கம் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், நேற்று ஒரு சவரன் ரூ.1,12,160-க்கு விற்பனையானது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களே இந்தத் திடீர் விலையேற்றத்திற்குக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாகச் சரிவைக் கண்டு வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் ஒரு லட்சத்து பதிமூன்றாயிரத்தைத் தாண்டியிருப்பது நடுத்தர வர்க்கத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் திருமண சீசன் தொடங்க உள்ள நிலையில், விலை இன்னும் உயரக்கூடும் என நகை வியாபாரிகள் கணிக்கின்றனர்.
