ஒரு ஆண்டுக்குத் தங்கம் வாங்காதீங்க... பிரதமர் மோடியின் கோரிக்கையால் நகை விற்பனை 50 சதவீதம் சரிவு!

 
modi modi

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதாலும், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாலும் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி இன்னும் 1 ஆண்டுக்குத் தங்க நகைகளை மக்கள் யாரும் வாங்க வேண்டாம் என்றும், அதுபோல் சொந்த வாகனங்களைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் மின்சார வாகனங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தங்கம்

பிரதமர் மோடி விடுத்த இந்த முக்கியக் கோரிக்கையைப் பாரதிய ஜனதா கட்சியினர் தற்பொழுது நாடு முழுவதும் தீவிரமாக வழிமொழிந்து வருகின்றனர். இதன் எதிரொலியாகப் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கும் மோகம் பொதுமக்களிடம் தற்பொழுது 50 சதவீதம் வரை குறைந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோல் மக்கள் சொந்த வாகனங்களைக் குறைத்ததால் ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் நாளொன்றுக்குச் சுமார் 150 முதல் 250 லிட்டர் வரை பெட்ரோல் மற்றும் டீசல் மிச்சமாவதாகக் கூறப்படுகிறது.

தங்கம் தங்கத்தின்

பிரதமரின் இந்தத் திட்டத்திற்குப் பல்வேறு அரசியல் தரப்பில் இருந்தும் ஆதரவுகள் பெருகி வரும் நிலையில், நகைக்கடை உரிமையாளர்களும் மற்றும் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினரும் இந்த விற்பனை சரிவு குறித்த விபரங்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதற்கிடையே பிரதமரின் இந்தத் திடீர் பொருளாதார அறிவுரை குறித்துப் பல்வேறு சமூக ஊடகப் பக்கங்களில் ஆதரவாகவும் எதிராகவும் விவாதங்கள் எழுந்துள்ளன. நுகர்வோர் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த செய்தி தற்பொழுது இணையதளப் பக்கங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.