தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு... நகைப்பிரியர்கள் ஹேப்பி!
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து சாமானிய நுகர்வோர்கள் மற்றும் நகைப்பிரியர்களிடையே மாபெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,730 என்ற அளவில் இருந்தது.

இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 வரை சரிந்து, தற்பொழுது ஒரு சவரன் ரூ.1,17,000-க்கு அதிரடியாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலையைத் தொடர்ந்து இன்று வெள்ளியின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை நோக்கி நகர்வதால், இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் நகைக் கடைகளை நோக்கிப் படையெடுக்கத் தற்பொழுதே திட்டமிட்டு வருகின்றனர்.
