வெள்ளிக்கிழமையில் இன்ப அதிர்ச்சி... போட்டி போட்டு சரியும் தங்கம், வெள்ளி... !

 
தங்கம் தங்கம்

சென்னை ஆபரணத் தங்கச் சந்தையில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பெரும் ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. ஒரு நாள் விலை உயர்வதும் மறுநாள் விலை குறைவதுமாகப் பொதுமக்களிடையே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் வெள்ளி

நேற்றைய சந்தை நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து விற்பனையான நிலையில், இன்று அதன் விலை மேலும் சரிவைக் கண்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சவரனுக்கு அதிரடியாக ரூ.400 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,440-க்கு விற்கப்பட்டு வருகிறது.

தங்கம் தங்கத்தின்

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்து நிம்மதியைத் தந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.5,000 வரை சரிந்து, தற்போது ரூ.2,80,000-க்கு விற்பனை செய்யப்படுவதாகச் சென்னை தங்க நகைக் கடை உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.