ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 எகிறிய தங்கம் விலை !

 
தங்கம் தங்கம்

 

கடந்த சில நாட்களாகத் தொடர் சரிவைச் சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (ஜூன் 12) ஒரே நாளில் அதிரடியாக எகிறி தங்கப்பிரியர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பேரதிர்ச்சியை அளித்துள்ளது. நேற்று வரை ஓரளவுக்குக் கட்டுக்குள் இருந்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.2,400 வரை மளமளவென உயர்ந்து மீண்டும் ரூ.1,10,000 என்ற மைல்கல்லைக் கடந்து விறுவிறுப்பாக விற்பனையாகி வருகிறது.

தங்கம் வெள்ளி

நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,08,000-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்களால் இன்று சவரனுக்கு ரூ.2,400 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,400 என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேபோல், கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,800-க்கு விற்கப்பட்டு வருகிறது.

தங்கம் தங்கத்தின்

கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.116,000-க்கு விற்கப்பட்ட சூழலில், அடுத்த 11 நாட்களில் யாரும் எதிர்பாராத விதமாகச் சவரனுக்கு ரூ.8,000 வரை சரிந்து நடுத்தர மக்களுக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது. சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதால், முதலீட்டாளர்கள் தங்கம் மீதான தங்களது முதலீடுகளைக் குறைத்து டாலரில் முதலீடு செய்யத் தொடங்கியதே இந்தத் திடீர் விலை மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. டாலரின் ஆதிக்கத்தால் உலகச் சந்தையில் தங்கம் விலை கண்ணாமூச்சி காட்டி வரும் இந்த விவகாரம், தற்போது சோசியல் மீடியாக்களில் செம ஹாட் டாபிக்காக மாறி விவாதங்களைக் கிளப்பியுள்ளது!