நகைப்பிரியர்கள் உற்சாகம்... சட்டென சரிந்த தங்கம்!
சென்னையில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த தங்கம் விலை இன்று நகையப்பிரியர்களுக்குச் சற்றே மகிழ்ச்சி தரும் வகையில் ஓரளவு குறைந்துள்ளது. நேற்று வாரத் தொடக்கத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருந்த நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக இன்று அதன் விலை சற்றே சரிவைச் சந்தித்துள்ளது. இந்த திடீர் விலை வீழ்ச்சியானது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்தினர் மத்தியில் மிகப்பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிரடியாகக் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,480-க்கு விறுவிறுப்பாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து தற்பொழுது கடைகளில் ஒரு கிராம் தங்கம் ரூ.14,060-க்கு வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்டு வருகிறது. தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கிடுகிடுவென ஏறிக்கொண்டே சென்ற நிலையில், தற்பொழுது திடீரென சரிவை நோக்கி இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
