மீண்டும் உயர்ந்த தங்கம்... தொடர் சரிவில் வெள்ளி!

 
தங்கம் தங்கம்

தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முக்கிய முதலீடாக விளங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 18) சற்றே உயர்ந்து  நகைப் பிரியர்களை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று சென்னையில் ஒரு சவரன் ரூ.112,240-க்கும், ஒரு கிராம் ரூ.14,030-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.240 அதிரடியாக உயர்ந்து ரூ.112,480-க்கு விற்பனையாகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,060-க்கு விற்கப்பட்டு வருவதால் நகைக் கடைகளில் தங்கம் வாங்க வந்த பொதுமக்கள் சற்றே கவலை அடைந்துள்ளனர்.

gold

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே வேளையில், தொழிற்துறையினருக்கு அத்தியாவசியத் தேவையான வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.5,000 வரை  சரிந்துள்ளது. சென்னையில் கடந்த 15-ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.275-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 சரிந்து ரூ.2,75,000-க்கும் விற்பனையானது.  

தங்கம் வெள்ளி

இன்றைய நிலவரப்படி வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.270-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,70,000-க்கும் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் அனல் பறக்கும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் நாணய மதிப்பு ஏற்ற இறக்கங்களே இந்த விலை மாறுபாட்டிற்கு முக்கியக் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.