வாரத்தின் முதல் நாளில் உற்சாகம்... தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை!
ஜூன் மாதம் தொடங்கிய முதல் நாளே தங்கம் விலையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டு நகை பிரியர்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் ஜூன் 20 சனிக்கிழமை அன்று, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சவரனுக்கு ரூ.240 வரை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,800 என்ற புதிய உச்ச விலையை எட்டி நுகர்வோர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்த திடீர் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து இன்று சந்தையில் தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி அதே விலைக்கு விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,600-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,800-க்கும் எவ்வித மாற்றமுமின்றி நிலையாக நீடிக்கிறது. அதேபோல 18 காரட் தங்கம் விலையும் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.11,370-க்கும், ஒரு சவரன் ரூ.90,960-க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே ஏழை எளிய மக்களின் முதலீடாக விளங்கும் வெள்ளி விலையும் கூட இன்று எவ்வித மாற்றமுமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது. இதன்படி தூய வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் எவ்வித விலை மாற்றமுமின்றி சந்தையில் வர்த்தகமாகி வருகிறது.
