சர்...ரென குறைந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
தமிழகத்தின் முக்கியப் வர்த்தகப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த விலைமதிப்பற்ற ஆபரணத் தங்கத்தின் விலையில், இன்று காலை நேரத்தில் நல்ல வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தையின் வர்த்தக நிலவரங்கள் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் வரை சரிவடைந்து, ஒரு சவரன் தங்கம் 1,05,120 ரூபாய்க்கு விறுவிறுப்பாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் சில்லறை வர்த்தகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 210 ரூபாய் வரை தற்பொழுது குறைந்துள்ளது. இந்த திடீர் விலை சரிவின் காரணமாக இன்று ஒரு கிராம் தங்கம் 13,140 ரூபாய்க்கு நுகர்வோர்களால் வாங்கப்படுகிறது. தங்கத்தின் விலையைப் போன்றே நடுத்தரக் குடும்பத்தினர் அதிகம் பயன்படுத்தும் வெள்ளியின் விலையிலும் இன்று கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 10 ரூபாய் வரை குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலைமதிப்பற்ற உலோகங்களின் இந்த திடீர் விலை வீழ்ச்சி திருமணச் சுபகாரியங்களுக்காகத் தங்கம் மற்றும் வெள்ள நகைகளை வாங்கத் திட்டமிட்டிருந்த நுகர்வோர் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் நாள்களிலும் தங்கத்தின் விலை மேலும் குறைவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தங்க நகைக் கடை உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
