ஆடி செவ்வாயில் இன்ப அதிர்ச்சி... தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு!

 
தங்கம்

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்துள்ள நிலையில் இன்று அதிரடிச் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த வாரத்தில் உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சட்டென்று வீழ்ச்சியடைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 வரை குறைந்து புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,720 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை திடீரெனக் குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

இதேபோல் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,215 என்ற அளவுக்கு விற்பனையாகி வருகிறது. நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,06,960-க்கு விற்கப்பட்டது. மேலும் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று சட்டென்று சரிந்துள்ளது. தங்கத்தின் விலையோடு சேர்த்து வெள்ளியின் விலையும் இன்று சரிவைச் சந்தித்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வெள்ளி

இதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார மாற்றம் மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களால் இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஒரே நாளில் கணிசமாகக் குறைந்துள்ளது சந்தையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.