குரு பூர்ணிமா நாளில் நகைப் பிரியர்கள் உற்சாகம்... 2 வது நாளாக சரிந்த தங்கம்!

 
தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாகக் குறைந்து நகைப்பிரியர்களுக்குச் சற்று ஆறுதலை அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் வர்த்தக மாற்றங்கள் மற்றும் கரன்சி மதிப்பின் மாறுபாடுகள் காரணமாக இந்த விலைகுறைவு ஏற்பட்டுள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.105,720-க்கும் விற்பனையானது.  

தங்கம் வெள்ளி

இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சவரனுக்கு ரூ.480 சரிந்து ரூ.1,05,240 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து இரு நாட்களாகத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது நகை வாங்குவோரிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே எழுந்துள்ளது.

தங்கம்

அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நிலைபெற்று வர்த்தகம் செய்யப்பட்டு  வருகிறது. இதன்படி ஒரு கிராம் வெள்ளி மாற்றமின்றி ரூ.235 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் என்ற அளவில் நீடிக்கிறது.  ஆடி பௌர்ணமி நாளில் தங்கம் வெள்ளி விலை சரிவை சந்திந்து இருப்பது நகைப் பிரியர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.