மாதத்தின் முதல் நாளில் இன்ப அதிர்ச்சி... சர்..ரென குறைந்த தங்கம்...!

 
தங்கம்

சென்னையில் குறைந்தது தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று (ஆகஸ்ட் 01) சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.105,760-க்கும் விற்பனையாகிறது. பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் இந்த விலை மாற்றத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

தங்கம் வெள்ளி

தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் சரிவு நகை வாங்குவோருக்கு ஒரு சிறிய நிம்மதியை அளித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலையில் பல்வேறு மாற்றங்கள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது நகை வாங்கும் திட்டங்களை அதற்கேற்ப மாற்றி அமைத்து வருகின்றனர். மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்ப தங்கத்தின் விலை தொடர்ந்து மாறுபடும் என்பதால் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தங்கம் தங்கத்தின்

இதற்கிடையே வெள்ளி விலையில் கடந்த சில நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று ஐந்தாவது நாளாக வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கு 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.