வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி... தங்கம் விலை மீண்டும் உயர்வு!

 
தங்கம்

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 13,965 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து 1,11,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப ஆபரணத் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பல்வேறு மாறுதல்கள் நிலவி வருகின்றன. நேற்றைய காலை வர்த்தகத்தில் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு சவரன் 1,10,000 ரூபாய்க்கும் ஒரு கிராம் 13,750 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கம்

ஆனால் நேற்றைய மாலைநேர வர்த்தகத்தின் போது ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளதுடன் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி கிராம் 150 ரூபாய் அதிகரித்துச் சவரனுக்கு 1,200 ரூபாய் வரை உயர்ந்து காணப்பட்டதுடன் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,11,200 ரூபாய்க்கும் விற்பனையானது. இவ்வாறு தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது நகை வாங்குவோரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் தங்கத்தின்

இதற்கிடையே வெள்ளி விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவது சற்று ஆறுதலைத் தந்துள்ளது. வெள்ளி விலை கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,50,000 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. விலை நிலவரங்களில் ஏற்படும் இந்தத் திடீர் மாற்றங்களால் நகைப்பிரியர்கள் மிகுந்த யோசனையில் ஆழ்ந்துள்ளனர்.