ஆடி செவ்வாயில் அதிர்ச்சி... தங்கம் விலை கிடுகிடு உயர்வு !

 
தங்கம்

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,400 வரை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.111,600-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளது.

தங்கம் வெள்ளி

இன்று ஒரு சவரன் ரூ.1,14,000 என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் நேற்று ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் தங்கத்தின்

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. திருமணப் பணிகளுக்காகத் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த பலரும் இந்த விலை உயர்வால் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். விலையேற்றத்திற்கான காரணங்கள் குறித்து வர்த்தக உலகத்தினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்