ஆவணி முதல் நாளில் அதிர்ச்சி... மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்...!

 
தங்கம்

 

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் சவரனுக்கு 400 ரூபாய் வரை உயர்ந்திருந்த நிலையில் நேற்றும் விலை சற்று அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் காரணமாகத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

தங்கம்

இந்நிலையில் இன்றும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் 1,14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 14,290 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் தங்கத்தின்

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து செல்வது திருமண நிகழ்வுகளுக்காகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த கவலையை அளித்து வருகிறது. இதற்கிடையே வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்று போலவே இன்றும் நிலையாக நீடிக்கிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.