நகைப் பிரியர்கள் அதிர்ச்சி.... ஒரே நாளில் 2ம் முறையாக தங்கம், வெள்ளி விலை உயர்வு!

 
தங்கம்

 

தங்கம் விலை மீண்டும் கடுமையான உச்சத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இன்று காலையில் தங்கம் விலையில் ஏற்பட்ட ஏற்றத்தைத் தொடர்ந்து, மாலையிலும் விலை மேலும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களும் நகை வாங்குவோரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம்

இன்று காலையில் தங்கம் விலையானது ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,710-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,17,680-க்கும் விற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலையில் வெளியான நிலவரப்படி, கிராமுக்கு மேலும் ரூ.140 உயர்ந்து ரூ.14,850-க்கும், சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து மொத்தம் ரூ.1,18,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையானது ஒரே நாளில் முந்தைய அளவிலிருந்து திடீரென உயர்ந்துள்ளது.

தங்கம் தங்கத்தின்

தங்கத்துடன் சேர்த்து வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.270-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்து இரண்டு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.