தங்கம் விலை கிடுகிடு உயர்வு... ஒரு சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியது!
Aug 24, 2026, 10:15 IST
தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு சுமார் 15 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் அதிகரித்து 15,030 ரூபாய்க்கும், ஒரு சவரன் 640 ரூபாய் அதிகரித்து 1,20,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்குவோர் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் அதிகரித்து 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,75,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
